ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
azadi ka amrit mahotsav

பணியிடங்களில் தூய்மை, மின்னணுக் கழிவு மேலாண்மை சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-க்கு தயாராகும் மத்திய ரசாயனத் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 11:13AM by PIB Chennai

நடப்பாண்டின் தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ஐ மேற்கொள்ள, மத்திய இரசாயனங்கள், உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை தயாராகி வருகிறது.

​2026-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு இயக்கத்தில், மின்னணுக் கழிவுகளை அகற்றுதல், இட மேலாண்மை, பணிச்சூழல் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

​இதற்கென செப்டம்பர் 15 முதல் 30 வரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் போது, பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

​தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்த இயக்கம், மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், அது சார்ந்த பிற வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மின்னணுக் கழிவுகளைக் கண்டறிந்து அகற்றுவதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், பணியிடங்களைத் திறம்படப் பயன்படுத்துதல், பயன்பாடற்றப் பொருட்களை அகற்றுதல், ஆவண மேலாண்மை, ஒட்டுமொத்த பணிச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும்.

​'மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், வகைப்படுத்துதல், அகற்றுதல்' என்பதே இந்த ஆண்டின் தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கத்தின் கருப்பொருளாகும்.

​மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315229&reg=3&lang=1

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315300) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu