பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்பிரீத் கௌருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 9:17PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்பிரீத் கௌரின் சிறப்பான சாதனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவரது சிறப்பான செயல்திறனைப் பாராட்டியுள்ளதோடு, அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குண்டு எறிதலில் மன்பிரீத் கௌர் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்!

அவரது அபாரமான திறமை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. மன்பிரீத்துக்கு வாழ்த்துகள்! அவரது தொடர் வெற்றிக்கு என் வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி"

(Release ID: 2315163)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315182) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Gujarati , Telugu