குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அருண் ஜேட்லி நினைவு விவாதப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 6:48PM by PIB Chennai
இளம் இந்தியர்கள் கேள்வி எழுப்பவும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும், நாட்டின் மீது வலுவான பொறுப்புணர்வுடன் செயல்படவும் வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற 3-வது அருண் ஜேட்லி நினைவு விவாதப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தின் முக்கியத் தூண் என்று கூறினார்.
கேள்விகள் கேட்காமல் ஜனநாயகம் இல்லை எனவும் ஆனால், இடையூரு ஏற்படுத்துவதற்காக இல்லாமல், வளர்ச்சிக்காக, தேவைப்படும் இடங்களில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசத்தின் வளர்ச்சிக்கு அருண் ஜேட்லி ஆற்றிய பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங். ஸ்ரீராம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சிம்ரித் கவுர், அருண் ஜேட்லியின் மனைவி திருமதி சங்கீதா ஜேட்லி ஆகியோருடன், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315041®=3&lang=1
(Release ID : 2315041)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315159)
வருகையாளர் எண்ணிக்கை : 13