அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மறு பயன்பாடு கொண்ட அக்னிபான் ஏவுகணை தயாரிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 3:09PM by PIB Chennai

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மறு பயன்பாடு கொண்ட அதி நவீன இந்தியாவின் விண்வெளி சார்ந்த அமைப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரூ.200 கோடி நிதியுதவியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு உதவிடும்.

விண்வெளித் துறையில் தொழில்நுட்பத் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய அக்னிபான் ஏவுகணையை உருவாக்குவதில், அறிவியல் தொழில்நுட்பத்துறை உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.

விண்ணில் செலுத்தக்கூடிய வாகனங்களை உருவாக்குவதுடன், மறுபயன்பாட்டுடன் கூடிய செலுத்து வாகனங்களை அமைப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314836&reg=3&lang=1 

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315076) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu