புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய அரசின் உயர் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 4:00PM by PIB Chennai
மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த செயல்பாடுகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள், அதற்கான பிரத்யேக இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது பல்வேறு அமைச்சகங்கள் சார்ந்த உள்கட்டமைப்புப் பணிகள் குறித்த மேம்பட்ட கண்காணிப்பு, குறித்த நேரத்தில் மறு ஆய்வு செய்வது, தரவு சார்ந்த முடிவுகளை மேற்கொள்வது ஆகியவ்ற்றுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ரூ.33.60 லட்சம் கோடி மதிப்பிலான 1,731 உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் இந்த இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த செயலாக்க அறிக்கைகளை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதில் அமைச்சகங்கள், துறைகள் வாரியான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், திருத்தியமைக்கப்பட்ட திட்டச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் குறிக்கும் குறிப்பிடப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314852®=3&lang=1
***
SS/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315072)
வருகையாளர் எண்ணிக்கை : 13