சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு தொடர்பான பயிலரங்கை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 2:00PM by PIB Chennai

இந்தியப் புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு தொடர்பான பயிலரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய பயிலரங்கில், நாட்டில் உள்ள 58 புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், புலிகள் பாதுகாப்பிற்காக இந்தியாவில் 85,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு வரையறுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டில், வளர்ந்து வரும் அறிவியல் செயல்முறைகளையும், தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், வனத்துறைக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையே இணக்கமான உறவை மேம்படுத்துவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மனித-வனவிலங்கு மோதல் குறித்து பகுதி வாரியாக மதிப்பீடு செய்ய அறிவுறுத்தினார். மேலும், குறிப்பிட்ட இடத்திற்கான நிலப்பரப்பு மேலாண்மை மற்றும் உள்ளூர் சமூக -பொருளாதார  கருத்தாய்வுகளை உள்ளடக்கிய தகவமைப்புப் பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314795&reg=3&lang=1

***

SS/AC/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2315070) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi