சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வன மேலாண்மை திட்ட மேம்பாட்டை வலியுறுத்தி புதுதில்லியில் சர்வதேச பயிலரங்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 10:57AM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், வன மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்தப் பயிலரங்கத்தை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையுடன் இணைந்து நடத்திய இப்பயிலரங்கில், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான சவால்களை எதிர்கொள்ளவும், பிரந்தியத் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவது குறித்தும், சமீபத்திய அறிவியல் அணுகுமுறைகள், நவீனத் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், வனத்துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பில் இந்தத் திட்டம் முக்கிய மைல்கல் என்றார்.
மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், வனத்தைச் சார்ந்து வாழும் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்கு வனங்கள் இன்றியமையாதவை என்று அவர் வலியுறுத்தினார்.
செயல்பாட்டு மற்றும் நிர்வாகத் திறனில் வனத்துறை ஊழியர்களின் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிவுறுத்தினார்.
புதுதில்லியில் நடந்த பயிலரங்கில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அதிகாரிகள், துறை பிரதிநிதிகள், ஜப்பான் சர்வதேச முகமையின் அதிகாரிகள், வனத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314681®=3&lang=1
***
SS/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315064)
வருகையாளர் எண்ணிக்கை : 24