அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நலவாழ்வு என்பது நோய்த் தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, மனம், உடல் சார்ந்த நலனில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 4:59PM by PIB Chennai

நலவாழ்வு என்பது நோயின்மை மட்டுமின்றி, நோய்த்தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, மனம், உடல் சார்ந்த நலனில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற சுகாதாரம், நலவாழ்வு குறித்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் நவீன சுகாதாரச் சேவைகளுடன் ஆயுர்வேதம், யோகா, நலவாழ்வு மையங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புக் குறித்த விழிப்புணர்வு மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு ஆரோக்கியமான இளம் தலைமுறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். 

சுகாதாரப் பராமரிப்பு என்பது குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சைப் பெறுவதுடன், மனம், உடல் சார்ந்த நலவாழ்விற்கும் பணியிடச் சூழல், வாழ்வியல் சூழல், வசதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். சுகாதாரப் பராமரிப்புக் குறித்த புரிதல், நோய்த்தடுப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் முறை ஆகியவற்றின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314912&reg=3&lang=2

***

SS/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315062) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी