பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பாரத் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் 3 நாள் ஆலோசனை மாநாடு குஜராத்தில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 4:17PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாட்டு ஆணையம், நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறை ஆகியவை இணைந்து நடத்தும் பாரத் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஆலோசனை மாநாட்டின் 4-வது பதிப்பு, குஜராத்தின் வதோதராவில் உள்ள கதி சக்தி பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
உள்கட்டமைப்பு, கட்டுமானம், போக்குவரத்து, தளவாடங்கள், தொலைத்தொடர்பு துறைகளைச் சேர்ந்த 15 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் 26-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், கல்வி, தொழிற்துறை நிபுணர்கள், கதி சக்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மத்திய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
2026 செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெறும் இந்த 3 நாள் மாநாட்டில், மிஷன் கர்மயோகி திட்டத்தின் கீழ், திட்டம் மற்றும் சொத்து மேலாண்மையின் சிறப்பு குறித்து விவாதிக்கின்றனர்.
பிரதமரின் 2026 சுதந்திர தின உரையில் இடம்பெற்ற சப்ததாரா தொலைநோக்குப் பார்வையின் பின்னணியில் போக்குவரத்து, உள்கட்டமைப்புத் துறையை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டில் சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314398®=3&lang=1
***
SS/MM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314743)
வருகையாளர் எண்ணிக்கை : 14