விவசாயத்துறை அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கம்: வடகிழக்கு மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே தூய்மை விழிப்புணர்வு தீவிரப்படுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 4:53PM by PIB Chennai
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தங்களுடைய நிறுவனங்கள், கிளைகளுடன் இணைந்து தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தூய்மைப் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதும், குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தூய்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதும் இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி, கல்வித்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், அதன் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் ஆகியவற்றில் தூய்மை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314417®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314701)
வருகையாளர் எண்ணிக்கை : 11