நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவிலிருந்து செல்வம்: நிலக்கரி அமைச்சகத்தின் தீவிர முன்னெடுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 2:11PM by PIB Chennai

மின்னணுக் கழிவுகள் அகற்றம், பயன்படாத பொருட்கள் மேலாண்மை, பணியிட நவீன மயமாக்கலை மையப்படுத்தி, சிறப்பு தூய்மை இயக்கம் 6-ஐ மத்திய நிலக்கரி அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்தப் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.  நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து நி்ர்வாக அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டின்போது, மின்னணுக் கழிவுகளை முறையாகச் சேகரித்தல், பிரித்தல், அறிவியல்பூர்வமாக அகற்றலில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று நிலக்கரி அமைச்கம் அறிவித்துள்ளது.

கழிவிலிருந்து செல்வம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வை யின் அடிப்படையில் ஒரு மாத காலம் இந்தப் பணி நடைபெறும்.

அப்போது அலுவலக இடத்தை சரியாகப் பயன்படுத்துவது, துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதன்மூலம் வலுவான நடைமுறையை வலுப்படுத்தியவாறே தூய்மையான, பொது மக்களுக்கான நிர்வாகத்தை வளர்த்தெடுப்பதை நிலக்கரி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய அளவிலான சிறப்பு தூய்மை இயக்கம் 6-ன் ஆயத்தக் கூட்டத்தின் போது, துணை தலைமை இயக்குநர் திருமதி சேத்னா சுக்லா, துணைச் செயலாளர் திரு ராபின் காங்டே ஆகியோர் லோக் நாயக் பவனில் உள்ள ஆவண அறையை ஆய்வு செய்தனர்.

அப்போது தேவையற்ற ஆவணங்களை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314324&reg=3&lang=1

 

***

SS/MM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314517) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu