சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை இயக்கம் 6.0: மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளி்த்தல் துறையின் தூய்மை நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 10:29AM by PIB Chennai

நிலுவைப் பணிகளை உற்பத்தித் திறனாக மாற்றவும் கழிவுகளை வளமாக மாற்றவும் மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பது, ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது, மின்னணுக்  கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றும் நடவடிக்கையில் இந்தத் துறை முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

இதற்காக 6.0 சிறப்புத் திட்டம் 2026 அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

மின்னணுக் கழிவுகளை திறம்படச் சேகரிக்கவும், பிரிப்பதற்கும், அகற்றுவதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதே நேரத்தில் துறை மற்றும் சார்ந்த அமைப்புகளில் தூய்மை பணிகள் முன்னெடுக்கப்படும்.

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்ட சிறப்பு தூய்மை இயக்கம் 6.0 அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தவும் நிலுவைப் பணிகளை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314246&reg=3&lang=1

***

SS/MM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314470) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati