ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் 11-வது ஆயுர்வேத தின கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 5:00PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம், இன்று (23.09.2026) 11-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. இந்த கொண்டாட்டங்களில் பல்வேறு பொது விழிப்புணர்வு நிகழ்வுகள், கல்வி, சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சீவ் சர்மா, ஆயுர்வேதம் என்பது வெறும் மருத்துவ முறை மட்டுமல்ல எனவும் அது ஆரோக்கியமான, சமச்சீரான வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்றும் கூறினார். நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு, பொருத்தமான உணவு முறை, சிறந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமான தினசரிப் பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதில் நிறுவனத்தின் மருத்துவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313961&reg=3&lang=1

 

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314379) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi