சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களின் நலன், பராமரிப்பு மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்யும் அடல் முதியோர் மேம்பாட்டுத் திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 7:23PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் ‘அடல் முதியோர் மேம்பாட்டுத் திட்டம்’ மூலம் நாட்டின் மூத்த குடிமக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உள்ள 'மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம்' மற்றும் 'மாநில செயல் திட்டம்' ஆகியவற்றுக்காக மத்திய அரசு சுமார் ரூ.1089.58 கோடியை விடுவித்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மட்டும் 2014-15 நிதிஆண்டு முதல் 2025-26 நிதிஆண்டு வரை ரூ.953.53 கோடி செலவிடப்பட்டு, நாடு முழுவதும் 10.76 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளதாக சமூக நீதி அமைச்சகச் செயலாளர் திரு. சுதன்ஷ் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமானது முதியோருக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆதரவை வழங்குகிறது. மேலும், முதியோர் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதன் வாயிலாக அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் முதியோர் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ வழிவகை செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312204®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2312204
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314180)
வருகையாளர் எண்ணிக்கை : 24