அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் சிறப்பு இயக்கம் 6.0-க்கு அறிவியல், தொழில்நுட்பத் துறை தயாராகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 5:49PM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குதல், பொது நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, அறிவியல், தொழில்நுட்பத் துறை, அதன் தன்னாட்சி நிறுவனங்கள், கீழ்நிலை அலுவலகங்களுடன் இணைந்து, சிறப்பு இயக்கம் 6.0-ஐ நடத்தவுள்ளது.

நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைத்தல், திறமையான ஆவண மேலாண்மை, குறைதீர்ப்பு, தூய்மைப் பணிகள், அலுவலக இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்துறை சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, இத்துறை, அதன் இணை நிறுவனங்களில் முந்தைய சிறப்பு இயக்கங்களின் போது குறிப்பிடத்தக்க சாதனைகள் எட்டப்பட்டுள்ளன.

அந்தச் சாதனைகளின் அடிப்படையில், அறிவியல், தொழில்நுட்பத் துறை, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழுமையாகத் தயாராக உள்ளது . இத்துறை, தனது அனைத்து அமைப்புகளிலும் இந்தச் சிறப்பு இயக்கத்தைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்துவதன் மூலம், தூய்மையை மேம்படுத்துவதற்கும், நிலுவையில் உள்ள சிக்கல்களைக் குறைப்பதற்கும், பணியிடத் திறனை அதிகரிப்பதற்கும், பொறுப்புமிக்க நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312149&reg=3&lang=1

***

(Release ID : 2312149)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314178) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी