இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

100 வார போதைப்பொருள் இல்லா இளைஞர் இயக்கம் தொடக்கம்: நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதியேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 7:28PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க போதைப்பொருள் இல்லா இளைஞர்களை உருவாக்கும் நோக்கில், '100 வார போதைப்பொருள் இல்லா இளைஞர் இயக்கம்' சார்பில் நாடு தழுவிய 'தேசிய உறுதிமொழி விழா' செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது.

மத்திய அரசின் 'மை பாரத்' மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்  ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 259 நிறுவனங்கள் பங்கேற்றன. நாடு முழுவதும் 1,455 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 1,47,798 இளைஞர்கள் திரட்டப்பட்டனர்.

போதைப் பழக்கத்தைத் தடுப்பதையும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில், 45,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் 42,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கையெழுத்துப் இயக்கம் சிறப்பாக நடைபெற்றன. மேலும், தெருக்கூத்துகள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்கள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்பட்டது.

இந்த 100 வார இயக்கம், 'எனது ஆரோக்கியம், எனது பெருமை', 'தகுதியான இளைஞர்கள்' மற்றும் 'வாழ்க்கைத் திறன் மாதம்' எனத் தொடர்ச்சியான நிகழ்வுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, அவர்களைத் தொடர்ச்சியாக இதில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

இப்போதைப்பொருள் இல்லா விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும் வாரங்களிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக மையங்கள் வாயிலாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312210&reg=3&lang=1

***

செய்தி அடையாள எண்: 2312210

TV/VK/SH 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2314174) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Kannada