பிரதமர் அலுவலகம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 8:03PM by PIB Chennai
அன்பான மற்றும் சிந்திக்கத்தக்க வகையில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத்தரத்தை வலுப்படுத்தவும், வளரச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்யவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை ஒன்றிணைந்து நிவைவேற்றுவதற்கும், புதிய உத்வேகத்துடன் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ அன்பான, சிந்தனை வளமிக்க பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி”
நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்யவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதற்கும், புதிய உத்வேகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.
***
(Release ID: 2311637)
TV/SV/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2314018)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam