பிரதமர் அலுவலகம்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய நீர் மேலாண்மை முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள், நீர் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை குறித்து மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 1:45PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நீர் பாதுகாப்பு என்பது வலுவான பாதுகாப்பு அமைப்புகள், அறிவியல் ரீதியான தீர்வுகள், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொறுப்பு என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஜல் ஜீவன் இயக்கம், நமாமி கங்கா, நீர்ப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றின மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய நீர் மேலாண்மை முறையை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் இக்கட்டுரையில் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாநிலங்கள், சமூகங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் மக்களின் பங்கேற்பு எவ்வாறு எதிர்கால தலைமுறையினருக்கு நீடித்த முறையில் நீரைப் பாதுகாத்து வழங்க உதவும் என்பது குறித்த ஆழமானக் கண்ணோட்டத்தை இது அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“நீர் பாதுகாப்பு என்பது வலிமையான பாதுகாப்பு அமைப்புகள், அறிவியல் ரீதியான தீர்வுகள், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டுப் பொறுப்பு.
ஜல் ஜீவன் இயக்கம், நமாமி கங்கா, நீர் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றின மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய நீர் மேலாண்மை முறையை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் எழுதியுள்ளார்.
மாநிலங்கள், சமூகங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் மக்களின் பங்கேற்பு எவ்வாறு எதிர்கால தலைமுறையினருக்கு நீடித்த முறையில் நீரைப் பாதுகாக்க உதவும் என்பது குறித்த ஆழமான கண்ணோட்டத்தை இது அளிக்கிறது.”
***
(Release ID: 2313367)
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313617)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam