சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சுகாதாரத் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், 983 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.34.16 கோடி வழங்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 1:39PM by PIB Chennai
நமஸ்தே திட்டத்தின் கீழ், கழிவு நீர், கழிவு நீர்த்தொட்டித் தூய்மை பணியாளர்களுக்கான பிரிவு, 36 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளதாக சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு சுதன்ஷ் பந்த் தெரிவித்துள்ளார். இதில், 90,186 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆண்கள் 86,468 பேரும், பெண்கள் 3,713 பேரும் உள்ளனர். திருநங்கைகள் 5 பேர் உள்ளனர்.
அவர்களுக்கு 87,008-க்கு மேற்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகள், 753 அவசர கால மீட்பு சுகாதாரப் பிரிவுப் பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரு பந்த் தெரிவித்தார்.
சுகாதாரத் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், 983 பயனாளிகளுக்கு ரூ.34.16 கோடி மதிப்பிலான உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறினார். இதுவரை 87,037 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டு அதில் 87,008 உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313362®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313615)
வருகையாளர் எண்ணிக்கை : 5