நிலக்கரி அமைச்சகம்
12 ஆண்டுகளில் மத்திய நிலக்கரி நிறுவனம் அடைந்த வளர்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 12:52PM by PIB Chennai
நிலக்கரி உற்பத்தியில் தொடங்கி நவீன சுரங்கத் தொழில், நிலையான வெளியேற்றம், உள்ளடக்கிய வளர்ச்சியில் 2014-ம் ஆண்டிலிருந்து பெரும் மாற்றத்தை மத்திய நிலக்கரி நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் 12 ஆண்டுகால வளர்ச்சி பயணம், உற்பத்தித் திறன் விரிவாக்கம், இயந்திரமயமாக்கல், ரயில் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதி வலிமை, சமுக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. கொள்கை சீர்திருத்தங்கள், மேம்பட்ட திட்ட அனுமதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப பயன்பாடு, இயந்திமயமாக்கல், திறன்-எரிசக்தி பாதுகாப்பில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியதால்தான் இது சாத்தியமானது. 2013-14 ஆம் ஆண்டுகளில் 50 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தி, 2024-25-ம் ஆண்டில் 87.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது அதிக உற்பத்தியாகும். மத்திய நிலக்கரி நிறுவனத்தின் நிதி நிலைமை கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-18 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரு.808 கோடியாக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் ரூ.4,035 கோடியாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிகர மதிப்பு ரூ.3,816 கோடியிலிருந்து ரூ.16,464 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313343®=3&lang=1
***
SS/MM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313614)
வருகையாளர் எண்ணிக்கை : 12