தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த வருவாய் உடைய வாடிக்கையாளர்களுக்கு டிராய் சலுகை

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 1:04PM by PIB Chennai

தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிமுறைகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. இதற்கான வரைவை, வாடிக்கையாளர்களின் ஆலோசனைக்காக தனது இணையதளத்தில் கடந்த 07.04.2026 அன்று ட்ராய் வெளியிட்டிருந்தது. 2024-ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு 12-வது திருத்தம் அமலுக்கு வந்தபின், குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரம்புகளை விதித்திருப்பது கண்டறியப்பட்டது. நீண்ட கால அவகாசம் பிரிவில் இந்தச் சேவை சேர்க்கப்பட்டதால், குறைந்த வருவாய் பிரிவினருக்கு   சலுகை கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனையை தீ்ர்ப்பதற்காக 13-வது திருத்தம் செய்ய வாடிக்கையாளர்களின் ஆலோசனையை ட்ராய் வரவேற்றது. பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது  திருத்தம்)       விதிமுறைகள்    2026-ஐ ட்ராய் இறுதி செய்துள்ளது. இதன் மூலம் குரல், எஸ்எம்எஸ் சேவைக்கான கட்டணம் குறையும். குறைந்த வருவாயுள்ள வாடிக்கையாளர்களின் தேவை, நிதிநிலைக்கு ஏற்ப அவர்களுக்கு மேலும் வசதிகளை 13-வது திருத்தம் வழங்கும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313349&reg=3&lang=1

***

SS/MM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313598) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी