நிலக்கரி அமைச்சகம்
'சிறப்பு இயக்கம் 6.0'-இன் ஆயத்தக் கட்டத்தைத் தொடங்கியது, நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 7:30PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, கோல் இந்தியா நிறுவனத்தின் முதன்மைப் பிரிவான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) , சிறப்பு இயக்கம் 6.0-க்கான ஆயத்தக் கட்டத்தை 2026 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை மேற்கொள்கிறது. இந்த இயக்கத்தின் செயல்பாட்டுக் கட்டம் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும்.
சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மின்னணுக் கழிவுகளைச் சிறப்பாக நிர்வகித்தல், அகற்றுதல், சுத்தப்படுத்துதல், அலுவலக வளாகங்களை மேம்படுத்துதல், ஆவண மேலாண்மை, பயனற்ற பொருட்களை அகற்றுதல், பயன்படுத்தப்படாத இடங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு என்சிஎல் முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, அடையாளம் காணப்பட்ட 90 இடங்களைச் சுத்தம் செய்யவும், 1,00,000 சதுர அடி பரப்பளவைச் சுத்தம் செய்யும் பணிகளுக்கு உட்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், சுமார் 3,500 மெட்ரிக் டன் அளவிலான பயனற்ற பொருட்களை அகற்றுவதும் இதன் இலக்காகும். இது தவிர, 400 காகிதக் கோப்புகள், 9,000 மின்னணுக் கோப்புகளும் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் ஆவணங்களை உரிய நேரத்தில் அப்புறப்படுத்துதல், இடவசதியை திறம்பட பயன்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312212®=3&lang=1
----
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313554)
வருகையாளர் எண்ணிக்கை : 23