விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறை அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 6.0-ஐ நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 4:53PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் துறை  வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வேளாண் நலத்துறை, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 6-ஐ நடத்துகிறது. இந்த இயக்கத்தின் நோக்கம் , தூய்மையை நிறுவனமயமாக்குதல், அரசு அலுவலகங்களில் பணிகள் தேங்குவதைக் குறைத்தல், பொதுமக்களின் அனுபவத்தை மேம்படுத்துதல், அரசு அலுவலகங்களில் உருவாகும் மின்னணுக் கழிவுகளை விதிகளின்படி சேகரித்தல், தரம் பிரித்தல், அகற்றுதல் ஆகியவை ஆகும்.

சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ், வேளாண்மை துறை, நாடு முழுவதும் உள்ள அதன் தலைமையகம், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் ஒரு விரிவான தூய்மை இயக்கத்தை மேற்கொண்டது. இத்துறையின் கீழ் உள்ள பல அமைப்புகளால் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு இயக்கம் 5.0-ன் போது இத்துறையின் முன்னேற்றங்கள் / சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு இயக்கம் 6.0 நடத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312089&reg=3&lang=1

***

(Release ID : 2312089)

TV/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313545) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी