மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்துறைக்கு முக்கிய உந்துசக்தியாக துல்லிய உற்பத்திச் சூழலமைப்பு உருவாகி வருகிறது - மத்திய அமைச்சர் திரு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 7:26PM by PIB Chennai
மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இன்று (18.09.2026) செமிகான் இந்தியா 2026 மாநாட்டில் பேசுகையில், இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம், அடித்தளம் அமைப்பதிலிருந்து பெரிய அளவில் தொழில்துறையைக் கட்டமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது என்று கூறினார். இந்திய செமிகண்டக்டர் திட்டம் 2.0-ன் கீழ் அடுத்த கட்டமாக, ஒரு முழுமையான குறைக்கடத்திச் சூழலமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஆறு ஆண்டுத் திட்டமாகத் திட்டமிடப்பட்ட செமிகண்டக்டர் இயக்கத்தின் முதல் கட்டம், வெறும் நான்கு ஆண்டுகளில் தனது நோக்கங்களை அடைந்ததாகக் கூறிய அமைச்சர், இரண்டாவது கட்டமும் இதேபோல் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இலக்கை அடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார். செமிகண்டக்டர் பொருட்களுக்கான தேவை தற்போது அதிகமாக இருப்பதாகவும், பல நிறுவனங்கள் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
செமிகண்டக்டர், மின்னணுவியல் ஆகியவை மிகவும் உலகமயமாக்கப்பட்ட தொழில்துறைகள் என்று அவர் கூறினார்.
மின்னணு உற்பத்திச் சூழலமைப்பானது, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடையே துல்லியமான உற்பத்தித் திறன்களை வளர்க்க உதவியுள்ளது என்றும், அவை தற்போது மின்னணுவியல், மொபைல் உற்பத்தி, விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
உற்பத்தி ஆலைகளுக்குள், தயாரிப்புத் தரம், உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தும் நோக்கில், பயன்பாட்டு ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அடுத்தகட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
துல்லியமான உற்பத்திக்குத் தேவையான திறன்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார். துல்லியமான உற்பத்திச் சூழலுக்குத் தேவையான திறமையான பணியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பல நிலை பயிற்சி மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
செமிகண்டக்டர் திறன் மேம்பாடு குறித்துப் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா ஆரம்பத்தில் 10 ஆண்டுகளில் 85,000 வடிவமைப்புப் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும், ஆனால் நான்கு ஆண்டுகளுக்குள் ஏற்கனவே சுமார் 70,000 வடிவமைப்புப் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறினார்.
மின்னணுவியல், செமிகண்டக்டர் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் ஆகியவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைந்துள்ளன என்று அவர் கூறினார். செமிகண்டக்டர் திட்டத்தில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மேலும் பல சிப்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312207®=3&lang=1
(Release ID : 2312207)
TV/PLM/SM
***
(வெளியீட்டு அடையாள எண்: 2313541)
வருகையாளர் எண்ணிக்கை : 11