விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களின் பிராந்திய வேளாண் மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் உரையாற்றினார்

உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம், ஊட்டச்சத்துப் பாதுகாப்பு ஆகியவையே விவசாயத்தின் மூன்று முக்கிய இலக்குகள் : திரு சிவராஜ் சிங் சௌகான்

தென்னிந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் பெரிய ஆற்றல் உள்ளது : திரு சிவராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 6:29PM by PIB Chennai

மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று (18.09.2026) ஹைதராபாத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கான பிராந்திய வேளாண் மாநாட்டில் உரையாற்றினார். இப்பிராந்தியத்தில் வேளாண் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், வாய்ப்புகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன. எல் நினோவின் தாக்கம், பயிர் பல்வகைப்படுத்தல், ரபி பருவத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடல்கள் வெறும் விவாதப் பொருளாக மட்டும் இருக்கவில்லை என்றும், விவசாயிகளின் வாழ்வில் உறுதியான முன்னேற்றங்களைக் கொண்டுவருவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, வேளாண்மை மூலம் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் திரு சௌகான் கூறினார். ஒரு மாநிலத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதன் அடிப்படையில் மத்திய அரசு வேளாண் பிரச்சினைகளை அணுகுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், பிற நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் உலகைத் தொடர்ந்து மாற்றியமைக்கும் எனவும் ஆனால் விவசாயம் எப்போதும் இன்றியமையாததாகவே இருக்கும் என்றும் திரு சௌகான் கூறினார். விவசாயம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்று அவர் தெரிவித்தார் அவர். ஒரு இயந்திரத்தால் ரொட்டி தயாரிக்க முடியும் ஆனால் அதனால் கோதுமையை உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்திய விவசாயத்திற்கான மூன்று முக்கிய நோக்கங்களை அவர் சுட்டிக் காட்டினார். முதலாவது, 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதாகும் எனவும், இரண்டாவது நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகும் என்றும்,  மூன்றாவது நோக்கம் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு எனவும் அவர் எடுத்துரைத்தார்.

வெவ்வேறு புவியியல், பருவ நிலைகளுக்கு விவசாயத்தில் வெவ்வேறு அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன எனவும் இந்த புரிதலுடனும், பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்குவதற்காகவும் தெற்கு பிராந்திய வேளாண் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். வேளாண் துறையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்தார்.

இந்தியாவின் தென்னை ஏற்றுமதி ஓராண்டில் ₹4,349 கோடியிலிருந்து ₹7,038 கோடியாக அதிகரித்து, 62% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். தென்னையை ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றும் அவர் கூறினார். தென்னை உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதால், இந்தப் புதிய முயற்சியின் முழுப் பயனையும் பெறுவதற்கான தயாரிப்புகளை அவை தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தென்னிந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் பெரிய ஆற்றல் உள்ளது என்றும் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312179&reg=3&lang=1

****

(Release ID : 2312179)

TV/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313537) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam