வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கேரளாவின் எகோசென்ஸ் கல்வி உதவித்தொகை கழிவு மேலாண்மையை வலுவூட்டுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 5:26PM by PIB Chennai
வகுப்பறைகள் முதல் சமூகங்கள் வரை, கேரளாவின் எகோசென்ஸ் முன்முயற்சியானது, இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாணவர்களைக் கழிவு மேலாண்மையின் செயல்மிகு முன்னோடிகளாக மாற்றி வருகிறது. ஏறக்குறைய 46,000 கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ள இத்திட்டம், மாணவர்களிடையே பசுமைத் திறன்களை வளர்ப்பதோடு, நிலைத்தன்மை கொண்ட பழக்கவழக்கங்களையும் பேணி வருகிறது.
குப்பையில்லா நகரத்தை நோக்கிய பயணம், ஒரு கழிவுப் பதப்படுத்தும் நிலையத்தில் தொடங்காமல், ஒரு வகுப்பறைக்குள்ளேயே தொடங்கினால் எப்படி இருக்கும்? கேரளா அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
கேரளாவின் மாணவர் பசுமைப் படை கல்வி உதவித்தொகை எகோசென்ஸ் இந்த அணுகுமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கேரள பொதுக் கல்வித் துறையுடன் இணைந்து, உள்ளாட்சித் துறையின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, இளம் உள்ளங்கள் கழிவு மேலாண்மை பற்றி கற்றுக் கொள்வதோடு நின்றுவிடாமல், அதனைச் செயல்படுத்தும் வகையிலும் மாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310134®=48&lang=2
***
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313352)
வருகையாளர் எண்ணிக்கை : 19