மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் மருந்துகள் துறையில் அக்.2 முதல் சிறப்பு இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 3:47PM by PIB Chennai

மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் மருந்துகள் அமைச்சகத்தின் 6-ம் ஆண்டு சிறப்பு பிரசார இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள முறையீடுகள், கோரிக்கைகள் உள்ளிடவை சிறப்பு பிரசாரம் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் மருந்துகள் அமைச்சகத்தின் கீழ் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களான பெங்கால் கெமிக்கல் மற்றும் பார்மசூட்டிகல் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு இயக்கத்தில் பங்கேற்கின்றன.   

தூய்மை கலாசார திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு கட்டங்களாக நடைபெறும் பணிகளில், கள அலுவலகங்கள் முழுவதும் உள்ள மின்னணுக் கழிவுகளை திறம்பட சேகரித்து, தரம் பிரித்து, அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கள அலுவலகங்கள்,  பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள குறிப்புகள் மற்றும் தேவையற்ற மனு அல்லது முறையீடுகள் போன்றவற்றை கண்டறிந்து தரம் பிரித்து அப்புறப்படுத்தும் செயலாக்க பணிகள் நடைபெறுகின்றன. 

இந்த நடவடிக்கைகளின் மூலம், மருந்துத் துறையில் வெளிப்படைத்தன்மை கொண்ட செயல்பாடுகள், திறமையான பொதுச் சேவை வழங்கல் மற்றும் நிலையான அலுவலக மேலாண்மை ஆகியவற்றை நிலை நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312002&reg=3&lang=1

***

TV/AC/SM    


(வெளியீட்டு அடையாள எண்: 2313328) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी