மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை நோய் தடுப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கிற்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 3:56PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உலக கால்நடை சுகாதார அமைப்புடன் இணைந்து, இந்தியாவில் கால்நடை நோய்த் தடுப்பு மண்டலத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில், செப்டம்பர் 15 முதல் 17 வரை சர்வதேச கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பாரீஸில் உள்ள உலக கால்நடை சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்புத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் தொழில்நுட்பப் பகுப்பாய்வு, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு, சர்வதேச தரநிலைகளை கடைபிடிப்பது, நோய் தடுப்பு மண்டல செயல் திட்டங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவை வலுப்படுத்த ஆதரவளிப்பதையும் இந்தப் பயிலரங்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

கருத்தரங்கில், மத்திய கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார், இந்தியாவில் கால்நடை பராமரிப்பு துறையில் அரசு மேற்கொண்ட நோய் கட்டுப்பாட்டு முயற்சிகள் குறித்து பேசினார். 

இதுவரை 147.16 கோடிக்கும் அதிகமான நோய் தடுப்பூசி டோஸ்கள் கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம், சுமார் 8.04 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும், கடந்த 2019-ம் ஆண்டு நாட்டில் 132-ஆக இருந்த கால்நடை நோய் பாதிப்பு குறியீடு 2025-ம் ஆண்டு 40-ஆக குறைந்ததாகவும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாதிப்பு 20-ஆக மேலும் குறைந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312013&reg=3&lang=1

***

TV/AC/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313198) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी