சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உதவி உபகரணங்கள், உதவி எண், பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 5:09PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் மூத்த குடிமக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவியை அளித்து வருகிறது. இத்திட்டம், தேசிய மூத்த குடிமக்களுக்கான உபகரணத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான உதவி எண், மூத்த குடிமக்களின் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
தேசிய மூத்த குடிமக்களுக்கான உபகரணத் திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள, குறைந்த வருவாய் கொண்ட பிரிவுகளைச் சேர்ந்த முதியோர்களுக்கு கட்டணமில்லாமல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
2017-18 முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டு வரை இத்திட்டத்தின் கீழ் 46,32,716 உதவி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்மூலம், 8,53,728 பேர் பயனடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான உதவி எண் 2021 அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டது. இது மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் தேவையான தகவல், வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை அளிக்கிறது.
2021-22 முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டு காலத்தில் இந்த உதவி எண்ணுக்கு 29 லட்சத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313057®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313175)
வருகையாளர் எண்ணிக்கை : 5