சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
திஷா 2.0 திட்டத்தின் கீழ் கோவாவில் பிராந்திய பயிலரங்கு நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 3:33PM by PIB Chennai
கோவாவில் உள்ள இந்திய சர்வதேச சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் பல்கலைக்கழகத்தில், மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித்துறை, திஷா 2.0 திட்டத்தின் கீழ், 2026 செப்டம்பர் 21 அன்று பிராந்திய அளவிலான பயிலரங்கை நடத்தியது. மக்களை நோக்கமாகக் கொண்டு நீதி வழங்கலை வலுப்படுத்துதல், சட்ட உரிமைகள், நிவாரணங்கள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிலரங்கு கவனம் செலுத்தியது. இதன்மூலம் நீதி அணுகல், சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி, தொழில்நுட்பம் சார்ந்த சட்டச் சேவைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியமானவர்களை இப்பயிலரங்கு ஒருங்கிணைத்தது.
சட்ட தகவல்கள், ஆலோசனைகள், உதவிகளைப் பெறுவதை எளிதாக்குவதற்காக தொழில்நுட்பம், சமூகம் சார்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவது உட்பட திஷா 2.0 திட்டத்தின் கீழ் நீதித்துறையால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இப்பயிலரங்கு முன்னிலைப்படுத்தியது. அத்துடன் பயனாளிகள், கிராமப்புற தொழில்முனைவோர்கள், வழக்கறிஞர்கள் குழு ஆகியோருக்கிடையே கலந்துரையாடுவதற்கான ஒரு தளத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312967®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313147)
வருகையாளர் எண்ணிக்கை : 12