புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய கணக்குகளுக்கான புள்ளிவிவரங்களைத் தொகுப்பதற்குத் தேவையான ஆதாரங்கள், வழிமுறைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 4:27PM by PIB Chennai
2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்களின் புதிய கணக்கீடுகள், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் 27 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டது.
பின்னர், ஜூன் 2026-ல் வெளியிடப்பட்ட புதிய கணக்கீடுகள் உற்பத்தியாளர் விலை குறியீடு, தொழில்துறை உற்பத்தி குறியீடு போன்றவற்றில், மாற்றங்களை உள்ளடக்கும் வகையில், 31 ஆகஸ்ட் 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது.
இந்த புதிய கணக்கீடு, 2011-12-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட முந்தைய கணக்கீடுகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் தேசிய கணக்குகள் சார்ந்த புள்ளி விவரங்களின் அடிப்படை ஆண்டு திருத்தத்தில், இது எட்டாவது முறையாகும்.
தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்களைத் தொகுப்பதற்கான ஆதாரங்கள், வழிமுறைகள் என்ற வெளியீட்டை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடுகிறது. புதிய கணக்கீட்டு முறையில் முழுமையாகப் பின்பற்றப்பட்ட கருத்துருக்கள், வரையறைகள், தரவுகள், வழிமுறைகள், தொகுப்பு நடைமுறைகள் குறித்த விரிவான தகவல்களை இந்த வெளியீடு வழங்குகிறது. புதிய கணக்கீடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்ட ஏழு மாதங்களுக்குள், மிகக் குறுகிய காலத்தில் இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313018®=3&lang=1
----
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313091)
வருகையாளர் எண்ணிக்கை : 9