பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படைக் கப்பல்களான சஹ்யாத்ரி, குலிஷ் ஆகியவை பிலிப்பைன்ஸ் நாட்டின் சுபிக் கடற்பகுதியை சென்றடைந்தன
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 11:37AM by PIB Chennai
கடல்சார் உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இடையே 2025 ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இருநாடுகள் இடையே தொழில்முறை, கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்திய கடற்படை கப்பல்களான சஹ்யாத்ரி, குலிஷ் ஆகியவை பிலிப்பைன்ஸ் நாட்டின் சுபிக் கடற்பகுதியை 2026 செப்டம்பர் 20-ம் தேதி சென்றடைந்தன.
ஆசியான் நாடுகளுக்கிடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழிற்முறைப் பயிற்சி, கடல் பகுதிகளில் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பிலிப்பைன்ஸ் சென்றிருப்பது, இந்தியாவின் மேற்கு கொள்கைச் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. மேலும், ஆசியன் நாடுகளின் பாதுகாப்பு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக அமையும். ஆசியான் உறுப்பு நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படைப் பயிற்சியை வலுப்படுத்துவது, கடல்சார் பகுதிகளில் சவால்களை ஒற்றிணைந்து எதிர்கொள்வது குறித்தும் இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும் வகையில், இந்தியக் கடற்படைக் கப்பல்களான சஹ்யாத்ரி, குலிஷ் ஆகியவற்றின் பிலிப்பைன்ஸ் பயணம் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312842®=3&lang=1
***
SS/LN/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313071)
வருகையாளர் எண்ணிக்கை : 10