சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தன்னார்வ நிகர பூஜ்ஜிய செயல்திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், தேசிய பருவநிலை திட்டங்களின் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்குமான டிஜிட்டல் தளங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 12:27PM by PIB Chennai
உலக ஓசோன் தினத்தையொட்டி, இந்தியாவின் நிகர பூஜ்ஜிய செயல்திட்டத்திற்கான இணையதளம், பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் தகவல்பலகை ஆகியவற்றை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், தொடங்கி வைத்தார்.
மும்பையில் இன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இந்த இரண்டு டிஜிட்டல் தளங்களும் வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு, ஆதாரங்கள் அடிப்படையிலான பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கையை வலுப்படுத்துவதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. நிகர பூஜ்ஜிய இணையதளம், நிறுவனங்கள் தன்னார்வ நிகர பூஜ்ஜிய உறுதிமொழிகளை மேற்கொள்வதற்கான ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் தகவல்பலகை, பருவநிலை மாற்றம் குறித்த தேசிய திட்டங்களில் ஏற்படும் முன்னேற்றங்களை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க உதவுகிறது.
நிகர பூஜ்ஜிய இணையதளம் என்பது, பல்வேறு துறைகளில் உள்ள இந்திய நிறுவனங்கள் தங்களின் நிகர பூஜ்ஜிய உறுதிமொழிகளைத் தன்னார்வத்துடன் பதிவு செய்வதற்கும், வெளியிடுவதற்கும் ஒரு முக்கிய டிஜிட்டல் தளமாகும்.
இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களின் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் தொடர்பான தரவுகளை வெளியிடலாம். நிகர பூஜ்ஜிய இலக்குகளை அறிவிக்கவும், வருடாந்திர முன்னேற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் வகை செய்கிறது. தூய்மை எரிசக்தி மாற்றம், எரிசக்தி உற்பத்தித் திறன், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள், கார்பன் அகற்றுதல் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட, நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய வழிமுறைகளை வகுக்கவும் இந்த இணையதளம் நிறுவனங்களுக்கு உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310737®=3&lang=1
-----
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312870)
வருகையாளர் எண்ணிக்கை : 7