பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் அதிவிரைவாக வளர்ச்சியடைந்து வரும் ஆழ் தொழில்நுட்பத் திறன்களை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 2:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜேஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி திரு ஸ்ரீதர் வேம்பு எழுதிய கட்டுரையை இன்று பகிர்ந்துள்ளார். இந்தியாவின் அதிவிரைவாக வளர்ச்சியடைந்து வரும் ஆழ் தொழில்நுட்பத்திறனுக்கு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமே பெரிதும் காரணம் என்பதை அக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
செமிகண்டக்டர்கள், விண்வெளி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவை எவ்வாறு திறன்களையும் அறிவையும் வளர்த்து வருகின்றன என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என்றும், கடினமான கற்றலை இந்தியா தற்போது தானே அதிகம் செய்யத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஜோஹோ-வின் தலைமை விஞ்ஞானி, திரு ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் ஆழ்-தொழில்நுட்பத் திறனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்புமே பெரிதும் காரணம் என்று எழுதியுள்ளார்.
செமிகண்டக்டர்கள், விண்வெளி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவை எவ்வாறு திறன்களையும் அறிவையும் வளர்த்து வருகின்றன என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கடினமான கற்றலை இந்தியா தற்போது தானே அதிகம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும் கூறுகிறார்."
***
(Release ID: 2311308)
TV/IR/GS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312855)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam