சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டாம் கட்ட திஷா திட்டத்தின் கீழ் கோவாவில் பிராந்தியப் பயிலரங்கை நாளை நடத்துகிறது சட்ட அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 3:58PM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறையானது, 'நீதிக்கான முழுமையான அணுகலை உறுதிசெய்வதற்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்' எனப்படும் திஷா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் (DISHA 2.0) நாளை (2026 செப்டம்பர் 21) கோவாவில் உள்ள இந்திய சர்வதேச சட்டக் கல்வி - ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் பிராந்தியப் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த சட்ட சேவைகள், சட்ட விழிப்புணர்வு முன்முயற்சிகள், நாடு முழுவதும் கட்டணமில்லா சட்ட உதவியை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் நீதிக்கான அணுகலை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் திரு அசோக் கஜபதி ராஜு, மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312689&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312707) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी