இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - ஜப்பானின் நகோயாவில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2026 1:44PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இன்று (2026 செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் நகோயாவில் உள்ள மெய்ஜோ பூங்காவில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 91-வது பதிப்பிற்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவிற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காக, புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினர் கூடியிருந்தனர்.
புலம்பெயர்ந்தோருடன் தொடர்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த முன்முயற்சி பிரதிபலித்தது.
திரு மன்சுக் மாண்டவியா, மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு ஆதரவளிக்க அவர்கள் ஒன்று கூடிய ஆர்வத்தைப் பாராட்டினார்.
"ஜப்பானின் நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 500-க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் கொண்ட நமது குழு பங்கேற்கிறது," என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜப்பானின் நகோயா சென்றுள்ள திரு மன்சுக் மாண்டவியா, அங்கு இந்திய விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடி, உலக அரங்கில் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312657®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312693)
வருகையாளர் எண்ணிக்கை : 14