பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 2:03PM by PIB Chennai

இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ஸ்லினெக்ஸ் - 26 (SLINEX-26)-ன் 13-வது பதிப்பு, 2026 செப்டம்பர் 17 முதல் 21 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்படையின் சார்பில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டியும், கடற்படை எரிபொருள் நிரப்பும் கப்பலான ஐஎன்எஸ் ஜோதியும் இதில் பங்கேற்றுள்ளன. அதே நேரத்தில் இலங்கைக் கடற்படை சார்பில் எஸ்எல்என்எஸ் சிந்துராலா இதில் பங்கேற்றுள்ளது.

இப்பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையே கடல்சார் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாடு, பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஸ்லினெக்ஸ்-26 பயிற்சியானது, பாதுகாப்பான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312662&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312692) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Malayalam