பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2026 4:16PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வாவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வாவில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."
***
(Release ID: 2312394)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312569)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam