தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பம் சார்ந்த நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தேவையற்ற வர்த்தகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பை ட்ராய் வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 3:22PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தேவையற்ற வர்த்தகத் தொடர்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தவறான செய்திகளிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலும், தேவையற்ற வர்த்தகத் தொடர்புகளை அனுப்புவதற்காகத் தொலைத்தொடர்பு வசதிகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும், தொலைத்தொடர்பு, வர்த்தக பயன்பாட்டிற்கான வாடிக்கையாளர் விருப்ப ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மோசடி தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளன ஒழுங்குமுறை விதிகள் தொடர்பான திருத்தங்கள் குறித்த வரவு அறிக்கையை மக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக கடந்த மார்ச் 13-ம் தேதி அன்று ட்ராய் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் நுகர்வோர் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ட்ராய் மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311989&reg=3&lang=1

***

SS/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312249) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी