பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசுப்பணிகளுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 51000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை இம்மாதம் 19-ம் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 3:09PM by PIB Chennai

அரசுப்பணிகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார். இம்மாதம் 19-ம் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் காணொலிக் காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ள இளைஞர்களிடம் அவர் கலந்துரையாடுகிறார்.

நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை, ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பணியில் சேரவுள்ளன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும்,  நாட்டின் வளர்ச்சிச் சார்ந்த பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும், மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை இந்த வேலை வாய்ப்பு முகாம் பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்த 20-வது வேலைவாய்ப்பு முகாமுடன் சேர்த்து இதுவரை பல்வேறு துறைகள் மற்றும் அரசு அமைப்புகளில் மொத்தம் 12.75 லட்சம் இளைஞர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311973&reg=3&lang=1

***

SS/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312247) வருகையாளர் எண்ணிக்கை : 35