வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷாங்காய் உச்சி மாநாடு: உலகளாவிய வர்த்தகத்தில் பாதுகாப்பு, இணைப்பு, வாய்ப்பை வலியுறுத்தும் இந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 12:43PM by PIB Chennai

25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதாரம், வர்த்தக அமைச்சர்கள் உச்சி மாநாடு தஜிகிஸ்தன் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதார ஒத்துழைப்பை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்வதற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் கலந்து கொண்ட ஸ்ரீ யாஷ்வீர் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார செயல்பாடுகள், உறுப்பு நாடுகள் இடையே வர்த்தக ஏற்றுமதி அதிகரிப்பு, வர்த்தகச் செலவுகளைக் குறைத்தல், மீள்திறன் கொண்ட விநியோக  நடைமுறைளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். 

மேலும், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்த தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்டு பேசிய அவர், இந்தியா பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று  அம்சங்களை முன்னிலைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கையில் விநியோகச் நடைமுறைகளின் மீள்திறனை வலுப்படுத்துவது, திறமையான, நம்பகமான இணைப்பை மேம்படுத்துவது, பரந்த சந்தை அணுகல் மூலம் வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் 2026 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புச் செயல் திட்டத்திற்கு அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311874&reg=3&lang=1

***

SS/AC/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312237) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati