பிரதமர் அலுவலகம்
உரையாடல்கள் எவ்வாறு மோதலை தவிர்க்கின்றன, நம்பிக்கை மூலம் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் வலுப்படுவது எவ்வாறு என்பதை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 2:57PM by PIB Chennai
உரையாடல்கள் எவ்வாறு மோதலை தவிர்க்கின்றன, நம்பிக்கை மூலம் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் வலுப்படுவது, வளர்ச்சி செழுமைக்கான புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் கூட்டுறவு கூட்டாட்சி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதையும், நம்பிக்கையுடன் எத்தகைய சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம் என்பதையும் இக்கட்டுரை விவரிக்கிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"மோதல்களுக்கு மாற்றாக உரையாடலில் ஈடுபடுவது, நம்பிக்கை மூலம் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் வலுப்படுவது, வளர்ச்சி வளமைக்கான புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது என்பது குறித்து தான் அண்மையில் எழுதிய கட்டுரையில், கடந்த பத்தாண்டுகளில் கூட்டுறவு கூட்டாட்சி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா விவரித்துள்ளார். நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதையும், நம்பிக்கையுடன் எதைச் சாதித்துள்ளோம் என்பதையும் ஆழமாகச் சிந்திக்க வைக்கும் ஒரு கட்டுரை இதுவாகும்.
***
(Release ID: 2311315)
TV/IR/GS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312199)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam