தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையையும் நிர்வாகத் திறனையும் வலுப்படுத்தும் தொழிலாளர் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 12:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின்  நேர்மை, திறமை,பொறுப்பான அரசு என்ற பார்வையுடன் இணைந்து தொழிலாளர்  அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை பழைய முறையிலான 416 கோப்புகளைக் கண்டறிந்தது நிர்வாகத் திறனை உயர்த்த உதவியுள்ளது. 100% இ-ஆபீஸ் முறையை தொழிலாளர் அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் காகிதமில்லா பணி என்ற நிலை எட்டப்பட்டுள்ளது.98% பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டன. பெறப்பட்ட 2,18,472 பொதுமக்கள் குறைகளில், 2,13,805 குறைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன. குறைகள் தொடர்பாக 98% மேல்முறையீடுகள் தீர்க்கப்பட்டன.  பெறப்பட்ட 48,828 குறை மேல்முறையீடுகளில் 47,850 மேல்முறையீடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. நிறுவனங்களை தூய்மைப்படுத்தவும் நிலுவைப் பணிகளை குறைத்து நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பிரச்சாரம் 6.0-வை முன்னெடுக்க அமைச்சகம் தயாராகி வருகிறது.   பணியாற்றும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நோக்கிலும், நல்ல பணிச் சுழலை உருவாக்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை இயக்கத்தை அமைச்சகம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311247&reg=3&lang=1

***

TV/MM/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2312169) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati