சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவில், தொலைவழி சட்ட சேவைகளுக்கான திஷா 2.0 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 6:34PM by PIB Chennai

நீதிக்கான முழுமையான செயல்பாடுகளை உறுதிசெய்யும் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல் (திஷா) 2.0 திட்டத்தின் கீழ், ஹரியானா மாநிலம் நுஹ் பகுதியில், தொலைவழி சட்ட சேவைகள் குறித்த அதிகாரிகள் நிலையிலான விழிப்புணர்வுப் பயிலரங்கை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், ஏற்பாடு செய்தது.

தொலைவழி சட்ட சேவைகளுக்கான திஷா 2.0 திட்டத்தின் முன்முயற்சியின் கீழ், ஹரியானாவின் நுஹ் பகுதியில் 15 செப்டம்பர் 2026 அன்று அதிகாரிகள் நிலையிலான விழிப்புணர்வுப் பயிலரகு நடைபெற்றது.

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின், நீதித் துறையின் இணைச் செயலாளர் திரு. சுரேஷ் குமார் தலைமையில் இப்பயிலரங்கு நடைபெற்றது. மொத்தம் 150 பங்கேற்பாளர்கள் இந்த விழிப்புணர்வுப் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

தொலைவழி சட்ட சேவைகள் வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், தொழில்நுட்பம் சார்ந்த சட்டச் சேவைகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல், குறிப்பாக கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310585&reg=3&lang=1   

***

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312111) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi