எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு இறக்குமதியில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய எஃகு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 11:36AM by PIB Chennai

எஃகு இறக்குமதியில் உள்ள சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கும் வகையில் இம்மாதம் 24-ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டத்தை புதுதில்லியில் நடத்துவதற்கு மத்திய எஃகு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

எஃகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சங்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக விவாதிப்பதற்கு இந்தக்கூட்டம் வகை செய்கிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய tech-steel[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையான விவரங்களை அனுப்புமாறு எஃகு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் பங்கேற்பாளர்களுக்கான நேர ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் எஃகு அமைச்சகம் கூறியுள்ளது.

எஃகு இறக்குமதி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிறுவனங்கள்/ சங்கங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான நேர ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்குத் தேவையானத் தகவல்களை இம்மாத 21-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று எஃகு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311834&reg=3&lang=1

***

SS/SV/PS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312034) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi