தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சென்னை மாநகரில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 12:49PM by PIB Chennai
சென்னை மாநகரில் மொபைல் நெட்வொர்க் தரத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஜூலை மாதம் 2 நாள்கள் மதிப்பீடு செய்தது.
நுகர்வோர்களின் தகவலுக்காக, கடந்த சென்னை மாநகரம் முழுவதும் நடத்தப்பட்ட சுயாதீன மதிப்பீட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவையின் நேரடித் தரத்தை மதிப்பிடுவதும் சரிபார்ப்பதும் இந்த சோதனையின் நோக்கம். கவரேஜ், அழைப்பு துண்டிப்பு விகிதம், தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் வேகம் போன்றவற்றை இந்த சோதனையின்போது டிராய் பதிவு செய்தது. பொதுப் போக்குவரத்து மையங்கள், ‘ஹாட் ஸ்பாட்டு’களில் மொபைல் நெட்வொர்க் செயல் திறன் பதிவு செய்யப்பட்டது. டிராய் நியமித்த நிறுவனம் மூலம் கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை இந்த மதிப்பீடு செய்யப்பட்டது. கவரேஜ் இடைவெளி, சிக்னல் வலிமை, குரல் சேவைகள், தரவு சேவைகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டன.
2ஜி முதல் 5ஜி வரை அனைத்து நெட்வொர்க்குகளிலும் நேரடி தரவு மற்றும் குரல் அமர்வுகள் பல மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளைப் பயன்படுத்தி நேரடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.
டிராய் 232.8 கி.மீ தொலைவுக்கு மொபைல் சேவை குறித்த வாகன மதிப்பீட்டை நடத்தியது. 7 ஹாட்ஸ்பாட்டுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. நடை பயணமாக 9.9 கி.மீ தொலைவுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகள் ஹைதராபாத்தில் உள்ள டிராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311244®=3&lang=1
***
TV/MM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311930)
வருகையாளர் எண்ணிக்கை : 5