ஆயுஷ்
வளர்ந்து வரும் ஆயுஷ் பொருளாதாரம், உலகளாவிய விரிவாக்கத்திற்குப் புதிய வழிகளைத் திறக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 5:34PM by PIB Chennai
ஆயுர்வேதம், உலகளாவிய சுகாதாரத்தில் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. உலகளாவிய சுகாதார சமூகம் பாரம்பரிய மருத்துவமானது, ஆராய்ச்சி, சான்றுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில், இந்தியாவின் விரிவடைந்து வரும் ஆயுஷ் பொருளாதாரம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
2026 செப்டம்பர் 23 அன்று இந்தியா தனது 11-வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடுகிறது. “ஆரோக்கியமான நாளைய தினத்திற்கான ஆயுர்வேதம்” என்ற கருப்பொருள், இந்தியா தனது பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுக் கட்டமைப்பை நவீன ஆராய்ச்சியுடன் இணைத்து வருகிறது. இப்போதுள்ள சவால், ஆயுர்வேதத்தை உலகிற்கு எடுத்துச் செல்வது மட்டுமல்ல. அதன் உலகளாவிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய சான்றுகள், நம்பகத்தன்மை, நிறுவன அடித்தளங்களை உருவாக்குவது ஆகியவை ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளில், ஆயுஷ் துறை குறிப்பிடத்தக்க பொருளாதார விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இது ஆயுர்வேதத்தின் வளர்ச்சிக்கும், அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆயுஷ் சந்தை 2014-ல் 2.85 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2023-ல் 43.4 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்தது. அதே காலகட்டத்தில், ஆயுஷ் ஏற்றுமதி 1.09 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2.16 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. அரசாங்கத்தின் முன்முயற்சிகள் இத்துறையில் தொழில்முனைவு, புத்தாக்கம் மற்றும் முதலீட்டிற்கான ஒரு பரந்த சூழலை உருவாக்க உதவியுள்ளன.
ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள், உலகளாவிய பாரம்பரிய, மருத்துவத்தில் அதன் பரந்த ஈடுபாட்டுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. மாறிவரும் சுகாதாரத் துறையில் ஆயுர்வேதத்தின் இடம் மேலும் வலுவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310151®=48&lang=1
----
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311554)
வருகையாளர் எண்ணிக்கை : 8