வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மெர்கோசுர் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 5:57PM by PIB Chennai

மத்திய மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உருகுவே குடியரசின் வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் ஆகியோர், மெர்கோசுரின் தற்காலிகத் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கும் மெர்கோசுர் நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதாக அறிவித்தனர்.

மெர்கோசுர் என்பது அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் அடங்கிய வர்த்தக கூட்டமைப்பாகும். இதன் தற்காலிக தலைமைத்துவ நாடாக தற்போது உருகுவே உள்ளது.

தத்தமது பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், அத்துடன் தனியார் துறைகளுக்கு அதிக நன்மைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, பரஸ்பர நலன் சார்ந்த வகையில் தற்போதைய ஒப்பந்தத்தை விரிவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக, இந்தியாவும் மெர்கோசுரும், விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தக் கட்டமைப்பை வரையறுக்கும் செயல்பாட்டு விதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310166&reg=48&lang=1

----

TV/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311550) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu