அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
படிகத் திடப்பொருளில் காணப்படும் அசாதாரண அலை போன்ற வெப்பக் கடத்தல், தொழிற்சாலைகளில் வீணாகும் வெப்பத்தை மாற்றுவதில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 5:59PM by PIB Chennai
தாலியம் காப்பர் செலனைடு (TlCu5Se3) எனப்படும், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு காப்பர் சால்கோஜனைடு பொருளில் கண்டறியப்பட்ட ஒரு அசாதாரணமான வெப்பக் கடத்தல் முறையானது, மின் உற்பத்தி நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், எஃகு ஆலைகள், வாகனங்கள், தரவு மையங்கள், மின்கல வெப்ப மேலாண்மை அமைப்புகள் போன்றவற்றில், வெப்பமின் ஆற்றல் மாற்றத்தின் மூலம் வீணாகும் வெப்பத்தைத் திறமையாக மின்சாரமாக மாற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட தாலியம் காப்பர் செலனைடு (TlCu5Se3) என்ற காப்பர் சால்கோஜனைடு பொருளில், உயர் செயல்திறன் கொண்ட வெப்பமின் மாற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு அசாதாரண அலை போன்ற வெப்பக் கடத்தல் முறையைக் கண்டறிந்தனர்.
TlCu5Se3-ன் சிக்கலான படிகக் கட்டமைப்பு, தாமிர அணுக்களின் நீண்ட தூர இடப்பெயர்ச்சியை அனுமதிப்பதற்குப் பதிலாக அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம், வலுவான சீரற்ற இயக்கத்தை உருவாக்கி வெப்பக் கடத்தலைத் தடுக்க முடியுமா என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்த ஆய்வின் முக்கியத்துவம் வெப்பமின் செயல்திறனையும் தாண்டியது. உயர் செயல்திறன் கொண்ட வெப்பமின் ஆற்றல் மாற்றத்திற்கு இது எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இது நிறுவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310168®=48&lang=1
----
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311544)
வருகையாளர் எண்ணிக்கை : 8