சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் 34.54 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 6:45PM by PIB Chennai
நாடு தழுவிய பொது மக்கள் பங்கேற்பு மூலம் “போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற இலக்கை நோக்கிய முயற்சிகளை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் கூறுகையில், 1.67 லட்சத்திற்கும் மேற்பட்ட முதன்மைத் தன்னார்வலர்கள், சமூகத் தலைவர்கள், பணியாளர்களுக்கு போதைப்பழக்கத்தைக் கண்டறிதல், பராமரிப்பு வழங்குதல் தொடர்பான சிறப்புப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த முயற்சிகள், போதைப்பொருள் சார்புநிலையைக் கண்டறிவதற்கும், பராமரிப்பு தேவைப்படும் நபர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூகத்தின் திறனை வலுப்படுத்துகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் கீழ், தடுப்புக் கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனை, சிகிச்சை, மறுவாழ்வு ஆகியவற்றுக்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இன்றுவரை, நாடு தழுவிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம், 13.70 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 10.64 கோடி பெண்கள் உட்பட 34.54 கோடிக்கும் அதிகமான மக்களை போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் சென்றடைந்துள்ளது என்று திரு பந்த் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310202®=48&lang=1
----
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311357)
வருகையாளர் எண்ணிக்கை : 7